;
Athirady Tamil News

சாக்கடையில் நடு இரவில் மர்மாக இறந்து கிடந்த பிரித்தானிய பெண்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்..!!

0

ஸ்பெயினில் சாக்கடையில் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மர்மான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் Murcia பகுதியில் உள்ள Los Ramos-ன் San Javier-லிருந்து Torreagüera-வுக்கு செல்லும் சாலையில் இருக்கும் சாக்கடையில், 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் நடுஇரவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இது குறித்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை சோதித்த போது அப்பெண்ணிடம் பிரித்தானியா பாஸ்போர்ட் இருந்துள்ளது. இதனால் அவரை பொலிசார் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளனர். அதைத் தவிர வேறு எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.

அதவேளை அந்த பெண் இறந்து கிடந்த சாக்கடையில் இருந்து சில மைல் தூரம் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனால் அந்த கார் எரிந்து கிடப்பதற்கு, இப்பெண் இங்கு இறந்த கிடந்ததற்கும் எதுவும் சம்பந்தம் இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து Murcia அரசாங்கம் தெரிவிக்கையில், இன்று ஒரு இறந்த நிலையில் பெண்ணின் உடல் RM-301 அதாவது Los Ramos-லிருந்து Torreagüera-வுக்கு செல்லும் பகுதி வழியே கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெண் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1 கி.மீற்றர் தொலைவில் எரிந்த நிலையில் கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணிடம் பிரித்தானியா பாஸ்போர்ட் இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 18 =

*