;
Athirady Tamil News

மன்னாரில் நடைபெற்ற ஐ.தே.க. கூட்டத்தில் பிரதமர் ரணில் பங்கேற்பு..!! (படங்கள்)

0

மன்னார் மாவட்டத்தில் பிரதேச மற்றும் நகர சபைகளில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து (புதன்கிழமை) காலை 11 மணியளவில் தனியார் பேரூந்து நிலையத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*