;
Athirady Tamil News

தேர்தலை முன்னிட்டு பெண் வேட்பாளர்களை ஒன்றிணைத்து விஷேட கலந்துரையாடல்..!!

0

புத்தளம் மாவட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கவுள்ள சகல கட்சிகளையும் சேர்ந்த சிறுபான்மை பெண் வேட்பாளர்களை ஒன்றிணைத்து விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) புத்தளம் சனசமூக நிலையத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, கல்பிட்டி பிரதேச சபை மற்றும் வண்ணாத்திவில்லு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநித்துவப்படுத்தி போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

சம காலத்தில் பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமுள்ள தேவைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் போன்ற விடயங்கள் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கட்சிகளை தாண்டி பெண் வேட்பாளர்கள் என்ற வகையில் ஒன்றுபட்டு செயற்படுவது, பெண்களின் முன்னேற்றம், ஊரின் நலனுக்காக தொடர்ந்தும் சேவை செய்வது மற்றும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துவது போன்ற தீர்மானங்கள் இந்நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டன.

புத்தளத்தில் இயங்கும் பல அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் 25 பெண் வேட்பாளர்கள் உட்பட 31 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*