;
Athirady Tamil News

சுமந்திரனை முடக்கி விட்டு மாவை சேனதிராஜா தனது மகனை தமிழரசு கட்சியின் தலைவராக்க முயற்சி..!!

0

????????????????????????????????????
சுமந்திரனை முடக்கி விட்டு மாவை சேனதிராஜா தனது மகனை தமிழரசு கட்சியின் தலைவராக்க முயற்சி – வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா

சுமந்திரனை முடக்கி விட்டு மாவை சேனதிராஜா தனது மகனை தமிழரசு கட்சியின் தலைவராக்க முயற்சி என வடமாகாணசபை உறுப்பினர் தியாகராசா தெரிவித்தார்.

வவுனியா நகரசபை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும் தேசபந்து இ.கௌதமனை ஆதரித்து ஒழங்படுத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சொல்கின்றார் இரண்டு கோடி ரூபாய் வாங்கினேன் என்று கூறுகிறார். ஒருபக்கம் சம்மந்தர் சொல்கின்றார் நாங்கள் பேரம் பேசித்தான் வாங்கினோம் என்று. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல கோரிக்கைகளை தமிழ் மக்களிற்கு வழங்கியிருக்கிறது அவ்வாறு வழங்கிய கோரிக்கைகளில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்களா. நாங்களும் முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டாலதான் விலகியிருந்தோம்.

வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை விட 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வருடம் இப்பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு அபிவிருத்திக்காக இரண்டு கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்ட எட்டு கோடி ரூபாவில் எவ்வாறான வேலைத்திட்டம் நடைபெற்றது என்று தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சொல்கிறார் இரண்டு கோடி ரூபாய் வாங்கவில்லை என்று ஆனால் மறுநாள் சம்மந்தர் சொல்கிறார் தன்னுடன் சேர்த்து 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் பேரம் பேசி வாங்கியதாக கூறுகிறார். இவர்கள் எதற்காக பேரம் பேசி இந்நிதியை வேண்டினார்கள்.

அபிவிருத்தி என்பது தமிழர்களுக்கு முக்கியமானதல்ல. இன்று சிறையில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பேரம் பேசினீர்களா அல்லது காணாமல் போன உறவுகளிற்காக பேரம் பேசினீர்களா அல்லது காணி விடுவிப்பிற்காக போராடும் கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக பேரம் பேசினீர்களா? அல்லது வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்காக பேரம் பேசினீர்களா? என்றால் இல்லை.

பத்து வருடத்திற்கு முன்பு வவுனியாவில் அரசாங்க அதிபராக இருந்த திருமதிசாள்ஸ் ஒமந்தை பிரதேசத்திலே 25 ஏக்கர் ஒதுக்கி ஒருங்கினைப்பு கூட்டத்திலே தீர்மானம் எடுக்கப்ட்டிருந்தது.

ஆனால் பொருளாதார வர்த்தக மையம் அமைக்க ஒமந்தையா ஈரற்பெரியகுளமா என்ற நிலையில் சம்மந்தர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வாக்களிப்பிற்கு விட்டார். இவ்வாக்களிப்பில் வடக்குகிழக்கை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் வாக்களிப்பில் ஈடுபட்டனர். வவுனியாவில் செய்யப்படவுள்ள அபிவிருத்திக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் கிழக்கை சேர்ந்தவர்களும் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

வவுனியாவின் அபிவிருத்திக்கு வவுனியாவை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தானே தீர்மாணிக்க முடியும். தற்போது பல கோடி ரூபாய் நிதியில் ஒமந்தையில் உருவாக்கப்பட வேண்டிய பொருளாதார வர்த்தக மையம் சிங்கள பகுதிக்கு சென்றுவிட்டது. இது ஒரு ஜனநாயகமற்ற செயலாகும். இது போன்று தமிழரசு கட்சியிலும் ஜனநாயகமின்றி உள்ளது.

தற்போது மாவை சேனாதிராஜா தனது மகனை உள்ளுராட்சி தேர்தல் வட்டாரத்தில் வேட்பாளராக்கியுள்ளார். முhவை சேனாதிராஜாவிற்கு இவ்வளவு வயதான பின்னும் கட்சி விட்டு போகாமல் இருக்க தனது மகளை யாழ் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தியுள்ளார். தமிழரசு கட்சியிலே பல படித்தவர்கள் உள்ளனர்.

குறிப்பாக படித்த கல்விமானும், சட்டத்தரணியும் தமிழரசு கட்சியில் பிரபலமானவருமான சுமந்திரனே அடுத்த தமிழரசு கட்சியின் தலைவராக வர வேண்டியவர். அவரை முடக்கி விட்டு தனது மகனை அடுத்த தமிழரசு கட்சியின் தலைவராக ஆக்குவதற்காக வேட்பாளராக்கியுள்ளார். குறிப்பாக மாவை சேனாதிராஜாவினால் அபிவிருத்திக்காக அவரது மகன் போட்டியிடும் வட்டாரத்திலேயே செலவழிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 14 =

*