;
Athirady Tamil News

உ.பி.யில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி பலி..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தைச் சேர்ந்த பன்வாரி சிங் யாதவ் நேற்று தனது 4 வயது பேத்தி பூனமுடன் வெளியே சென்றார். கயாத்நகர் பகுதியில் வைத்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பன்வாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் பூனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். பன்வாரி படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு பன்வாரி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சொத்து தகராறால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + nineteen =

*