;
Athirady Tamil News

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு..!! (படங்கள்)

0

மட்டக்களப்பு, கல்முனையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக நடைபெற்ற இந்தப் பிரசாரக்கூட்டம் நற்பட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மேலும், தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*