;
Athirady Tamil News

நெல்லை-சென்னை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கம்..!!

0

மதுரை வழியாக நெல்லை- சென்னை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட மக்கள்- செய்தி தொடர்பாளர் வீராசுவாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-நெல்லை இடையே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82601) இயக்கப்படுகிறது.

இது எழும்பூரில் இருந்து நாளை இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 10.50 மணிக்கு நெல்லை செல்லும்.

இதேபோல நெல்லையில் இருந்து 4, 11-ந்தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82602), அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் செல்லும்.

இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சியில் நின்று செல்லும்.

நெல்லை-சென்னை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், மாம்பலம் நிலையத்திலும் நிற்கும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*