;
Athirady Tamil News

தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: சிவசேனா குற்றச்சாட்டு..!!

0

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பா.ஜனதா அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், மத்திய அரசு சமர்ப்பித்துள்ள இந்த பட்ஜெட் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட் ஆக உள்ளது என சிவசேனா கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியினர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட். எனவேதான், மத்திய அரசு தொழில்துறையில் இருந்து விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் மீது கவனம் செலுத்தி உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவிற்கு என்று மத்திய பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆந்திராவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மற்றும் சலுகை எதுவும் பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + thirteen =

*