;
Athirady Tamil News

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள்: 2-2-1933..!!

0

ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கைலத்த நாளாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1812 – கலிபோர்னியாவின் கரையோரங்களில் ஃபோர்ட் ரொஸ் என்ற இடத்தில் தோல் வர்த்தக குடியேற்றமொன்றை ரஷ்யா அமைத்தது. * 1822 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார். * 1848 – மெக்சிக்கோவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. * 1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள். * 1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது. * 1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன. * 1897 – பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது. * 1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

* 1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. * 1908 – 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்வு. * 1920 – எஸ்தோனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. * 1933 – ஜெர்மனியின் நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்தார். * 1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜெர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர். * 1946 – ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது. * 1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் இடி அமீன் உகாண்டாவின் அதிபராகத் தன்னை அறிவித்தார். * 1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது. * 1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

* 1989 – ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி ரஷ்யத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. * 1989 – செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. * 1998 – பிலிப்பைன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*