;
Athirady Tamil News

தந்தை தற்கொலை செய்து கொள்வதற்கு உதவிய மகள்..!!

0

Parkinson’s நோயால் பாதிக்கப்பட்ட 93 வயது தந்தையின் தற்கொலைக்கு உதவிய பிரித்தானியப் பெண் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

John Lenton என்னும் 93 வயது பிரித்தானியர் Parkinson’s நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

North Wales பகுதியிலுள்ள Pentrefoelas இல் செயல்பட்டு வரும் Cartref Bryn yr Eglwys முதியோர் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் திகதி முதியோர் இல்லத்திற்கு வந்த John Lentonஇன் மகளான Sandra Holmes தனது தந்தையை விடுமுறைக்காகத் தன்னுடன் அனுப்பும்படிக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆறு நாட்களுக்குப் பின் முதியோர் இல்லத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது, அதாவது சுவிட்சர்லாந்துக்கு சென்ற John Lenton, அங்கே தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது முதியோர் இல்லம் இந்த செய்தியை பொலிசாருக்குத் தெரியப்படுத்தியது.

மேலும், முதியோர் இல்லத்தில் இருந்த அவரை, அவரது மகள் அழைத்து சென்று தற்கொலை செய்துகொண்டிருக்க உதவி செய்திருக்கிறார் எனவும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், John Lenton இன் மகளான Sandra Holmes, தன்னுடைய அனுமதியின்றி தனது தந்தையின் மரண அறிவிப்பு செய்தித்தாளுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

பொலிசார் இதுகுறித்து கூறியுள்ளதாவது, அவரது மரணம் எத்தகைய சூழலில் ஏற்பட்டது என்பதை விசாரித்துக் கொண்டிருக்கிறோம்,இந்த சம்பவம் தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை, இதற்குமேல் தற்போது எதுவும் கூற இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியச் சட்டப்படி தற்கொலைக்கு உதவுவதோ அல்லது தூண்டுவதோ சட்டப்படி குற்றம். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள Dignitas facility என்பது அதீத உடல் மற்றும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் ஒரு அமைப்பு ஆகும்.இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் சுமார் 7 லட்சம் ரூபாய் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*