;
Athirady Tamil News

18 ஆண்டுகள் ரகசியத்தை உடைத்த வரலாற்று ஆய்வாளர்..!!

0

ஜேர்மனியில் 80 மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றை, கிறிஸ்டியன் போர்மன் எனும் வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு, ஜேர்மனியின் பெர்லினில் சுவர் ஒன்று இடிக்கப்பட்டது. இந்த சுவரானது, பான்கோவ் மாவட்டதில் 2 ரயில் நிறுத்தங்களுக்கு இடையே இருந்துள்ளது.

அரசாங்கத்தின் கோப்புகளில் இந்த சுவர் இடிக்கப்பட்டு விட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்ததால், இச்சுவர் பற்றிய விவரம் உள்ளூர் அரசுக்கு தெரியவில்லை.

இந்நிலையில், இந்த சுவரின் ஒரு பகுதியை வரலாற்று ஆய்வாளரான கிறிஸ்டியன் போர்மன் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால், இவர் இந்த சுவரை 18 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளார். எனினும், இது குறித்து யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த சுவர் குறித்து கிறிஸ்டியன் கூறுகையில், ‘நான் நீண்ட காலத்துக்கு முன்பே இந்தச் சுவரைக் கண்டுபிடித்தாலும் யாரிடமும் சொல்லவில்லை.

கடந்த 1961ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சுவர், ஜேர்மனியர்களைப் பிரித்திருந்தது. அதன் பின்னர், 28 ஆண்டுகள் கழித்து 140 கிலோ மீட்டர் நீளமிருந்த இந்தச் சுவரை, தரைமட்டமாக்கி விட்டதாகத்தான் மக்களும், அரசாங்கமும் நினைத்திருந்தனர்.

ஆனால், 80 மீட்டர் நீளமுள்ள சுவர் மட்டும் இன்னும் எஞ்சியிருக்கிறது. இச்சுவர் பற்றிய கோபம் எல்லோருக்கும் மறைந்திருக்கும் என்பதாலும், சுவர் மோசமான நிலைக்குச் செல்வதாலும் இந்த விடயத்தை வெளியே சொல்லியிருக்கிறேன். இதை ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*