;
Athirady Tamil News

5 வயது சிறுவனை அரக்கத்தனமாக நடத்திய பெற்றோர்..!!

0

அமெரிக்காவில் 5 வயது சிறுவனை மலம், மூட்டை பூச்சிகள், கரப்பான் பூச்சிகள், புழுக்கள் நிறைந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயோர்க் நகரின் ப்ரோங்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தங்களது ஐந்து வயது மகனை அவனின் பெற்றோரான வில்பிரிட் லீவிஸ் (59) மற்றும் சார்லோட் (48) தனியாக சில தினங்களாக தனியாக அடைத்து வைத்திருந்தனர்.

வீடு முழுவதும் மலம், எலிகள், மூட்டை பூச்சிகள், கரப்பான் பூச்சிகள், புழுக்கள் இருந்துள்ளன.

இந்நிலையில் சிறுவன் இருந்த வீட்டுக்கு கொரியர் செய்யும் நபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது சிறுவன் அருவருப்பான சூழலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை திறந்து சிறுவனை மீட்டனர். அங்கு சாப்பிட எந்த உணவும் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர்களான வில்பிரிட் மற்றும் சார்லோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தம்பதிக்கு 15,13 மற்றும் 12 வயதில் இன்னும் மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் தொண்டு நிறுவன பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தன் மகன் வீட்டை விட்டு பிரிய சிரமப்படுவான் எனவும் யார் உதவியும் இல்லாமல் தனியாகவே இருப்பான் எனவும் பொலிசில் வில்பிரிட் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 2 =

*