;
Athirady Tamil News

மரணப்படுக்கையில் இளைஞர்… வளர்ப்பு நாய் அளித்த பிரியாவிடை: நெகிழ்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

0

அதிக ரத்த அழுத்தம் காரணமாக மூளை செயலிழந்து மரணப்படுக்கையில் இருந்த இளைஞருக்கு அவரது வளர்ப்பு நாய் பிரியாவிடை அளித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

33 வயதேயான ரியான் ஜெஸ்ஸன் என்பவரே அதிக ரத்த அழுத்தம் காரணமாக மூளை செயலிழந்து மரணத்தோடு போராடியவர்.

தீவிர தலைவலி என கருதி அலட்சியப் படுத்திய நிலையில், அது ரியானை ஒருகட்டத்தில் படுத்த படுக்கையில் தள்ளியது.

இதனையடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வளர்ப்பு நாய் தமது நீண்ட கால நண்பருக்கு பிரியாவிடை அளித்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில், ரியானின் சகோதரி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பலரது நெகிழ்ச்சி கதைகளை கேட்டிருப்போம், ஆனால் இச்சம்பவம் உண்மையில் உருகவைப்பதாகும் என்றார்.

ரியானின் நீண்ட கால நண்பனான Molly என்ற செல்ல நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரியாவிடை செலுத்த வைத்துள்ளனர்.

இதனால் அந்த நாய்க்கு தமது நண்பர் ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும் என ரியானின் சகோதரி மிஷெல் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ரியானின் இதயம் 17 வயது நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும் ரியானுக்கு அவரது செல்ல நாய் பிரியாவிடை அளிக்கு அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 11 =

*