;
Athirady Tamil News

உலகிலேயே முதல் முறையாக: ஆபாச தளங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் புதிய சட்டம்..!!

0

பிரித்தானியாவில் ஆபாச வலைதளங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு இனி முதல் வயது சான்று கேட்கப்படும் என தெரியவந்துள்ளது.

குறித்த சட்டத்தை கடைபிடிக்காத இணையதளங்களுக்கு £250,000 அபராதம் அல்லது ஆண்டு வருவாயில் 5 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டு, முடக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சட்டமானது உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் பிரித்தானியாவே முதன் முறையாக செயல்படுத்த உள்ளது. ஆனால் குறித்த சட்டத்தை இன்னும் பாராளுமன்றம் உறுதி செய்யவில்லை என கூறப்படுகிறது.

உலகின் மிக அதிக ஆபாச திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமான MindGeek இதை வரவேற்றுள்ளதுடன், ஏற்கெனவே தங்கள் வலைதளங்களில் வயது குறித்த சான்றுகளை பெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி 18 வயதுக்கும் கீழே உள்ள சிறுவர்களுக்கு தங்கள் வலைதளத்தை பயன்படுத்த அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், இத்தகைய சட்டமானது ஹேக்கர்களால் இணையதளங்களை ஊடுருவி தகவல்கலை திருட வாய்ப்பளிக்கும் எனவும், ஏற்கெனவே கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல வலைதளம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 37 மில்லியன் சந்தாதாரர்களின் தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என செய்தி ஊடகங்கள் எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 17 =

*