;
Athirady Tamil News

2017-ல் நிலநடுக்க எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்ட சுவிஸ்..!!

0

சுவிட்சர்லாந்தில் கடந்தாண்டு மொத்தம் 1230 முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.இதில் பத்தாண்டுகளுக்கு மேல் இல்லாத அளவு ஏற்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அடக்கமாகும்.

சுவிஸ் புவிசார் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் 6-ஆம் திகதி 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது மத்திய சுவிஸில் உள்ள Urnerboden கிராமத்தின் அருகில் உணரப்பட்டது. யூலை 1-ஆம் திகதி மேற்கு பகுதியில் உள்ள Chateau d Oex அருகில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

2017-ல் மட்டும் மொத்தம் 23 தடவை 2.5 மற்றும் அதிகமான அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தின் செயல்பாடு பிரதானமாக வலியாஸ், கிரவுண்டன் மற்றும் அல்பைன் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் தான் அதிகம் உணரப்பட்டது.

1.0 என்ற அளவுக்கு குறைவாக சிறியளவில் 700-க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதும் புவிசார் சேவை நிறுவனத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + ten =

*