;
Athirady Tamil News

கொலைகார மலையில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட பிரெஞ்சு மலையேற்று வீரர்..!!

0

பாகிஸ்தானில் உள்ள ‘Killer Mountain’ எனும் மலையில், காணாமல் போன இரண்டு மலையேற்ற வீரர்களில் ஒருவரை, Polish மீட்புப் படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள, சுமார் 8,125 மீட்டர் உயரம் கொண்ட மலை ’Nanga Parbat’. உலகின் 9வது பெரிய மலையான இதற்கு, ’கொலைகார மலை’ எனும் புனைப்பெயர் உள்ளது.

ஏனெனில், 30க்கும் அதிகமானோர் இந்த மலையின் உச்சத்தை அடையும் முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரான்ஸைச் சேர்ந்த Elisabeth Revol மற்றும் போலந்தைச் சேர்ந்த Tomek Mackiewicz ஆகியோர் இந்த மலையில் பயணம் செய்துள்ளனர்.

அவர்கள் காணாமல் போன தகவல் தெரிந்ததும், கடந்த சனிக்கிழமை அன்று மலையேற்று வீரர்களைக் கொண்ட Polish மீட்புக் குழு ஒன்று, பாகிஸ்தானிய ராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் அவர்களைத் தேடும் பணியில் இறங்கியது.

மிகவும் ஆபத்தான மலையாக அறியப்படும் Nanga Parbat மலையில், மீட்புக்குழுவினர் தேடும் பணியை துரிதப்படுத்த ஹெலிகாப்டரை பயன்படுத்தினர்.

அதன் விளைவாக, Elisabeth Revol மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர், பனிப்பொழிவில் ஊர்ந்து செல்வதை, வானில் பறந்தபடி இருந்த மீட்புக்குழுவினர் Binoculars மூலமாகப் பார்த்து கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், Tomek Mackiewicz என்ன ஆனார் என்பது குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + fifteen =

*