;
Athirady Tamil News

02 கோடி ரூபா லஞ்சம் பெற்றது தொடர்பில் அரசாங்கம் மௌனமாக உள்ளது..!!

0

நாட்டில் தற்போது எதிர்க்கட்சி உட்பட நான்கு கட்சிகள் சேர்ந்தே ஆட்சியை நடாத்துகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர் கட்சியாக செயற்படாததுடன் இரா.சம்மந்தன் ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட் பைக்குள்ளேயே இருக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாமரை மொட்டு சின்னத்தில் களமிறங்கியுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று (01) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இப் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூன்று ஆண்டுகளின் பின்னர் நான் யாழ்ப்பாண மக்களுடன் பேசுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய காலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இருந்தது. உங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நாம் வழங்கியிருந்தோம்.

இருந்த போதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியை தழுவ வேண்டி ஏற்பட்டது. நான் ஆட்சியில் இருந்த போது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதாக கூறிவிட்டு சென்றார்களே தவிர திரும்பி வரவேயில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் 16 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளார்கள். இருந்தும் அவர்கள் எதிர்கட்சியாக இருக்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். ஆனால் எதிர்கட்சி எதிர்கட்சியாக இருக்கவேண்டும். அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முதலாவது எதிர்கட்சி சம்மந்தன் தலமையிலான எதிர்கட்சியாகவே இருக்கும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் 200 இலட்சம் ரூபா வாங்கியதாக தற்போது சிவசக்தி ஆனந்தன் கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் செய்வதற்காக பயன்படுத்தவில்லை. இந்த பாரிய குற்றச்சாட்டு தொடர்பாக மௌனமாக உள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 3 =

*