;
Athirady Tamil News

மத்திய பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளித்த அருண் ஜெட்லியின் மனைவி..!!

0

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதை காண பார்வையாளர்களாக அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கீதா ஜெட்லி கூறுகையில், என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பேன். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.

மத்திய பட்ஜெட்டுக்கு மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

ரோகன் ஜெட்லி கூறுகையில், இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*