;
Athirady Tamil News

மத்திய பட்ஜெட்: மோடி அரசுக்கு யோசனை தீர்ந்துவிட்டது- ப.சிதம்பரம் கருத்து..!!

0

மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதை பட்ஜெட் காட்டுகிறது. அவர்கள் சீர்திருத்தங்களை உறுதியாக செயல்படுத்துவதை கைவிட்டுவிட்டனர். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் வாக்குறுதிகள் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு கவர்ச்சியான விலை கிடைக்கும் என்கிறார்கள். இவ்வளவு நாள் என்ன செய்தார்கள். மொத்தத்தில் பார்க்கும்போது மோடி அரசுக்கு யோசனை தீர்ந்துவிட்டது. வேலை வாய்ப்பு உருவாக்குதல், விவசாய சீரமைப்பு, ஏற்றுமதி, முதலீட்டு வளர்ச்சி, மேலாண்மை ஒருங்கிணைப்பு போன்ற அனைத்திலும் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

தற்போது அவர்கள் அனைத்து முயற்சிகளையும் கைவிட்டுவிட்டார்கள். பொருளாதார விவகாரங்களில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அவர்களே பட்ஜெட் மூலம் ஒத்துக்கொண்டுள்ளார்கள்.

புதிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் மூலம் 10 கோடி குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ உதவி கிடைக்கும் என்று அறிவித்துள்ளனர்.

ஆனால் அந்த திட்டத்துக்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இது ஒரு ஏமாற்று வித்தை போல தெரிகிறது. இந்த திட்டத்திற்கு எங்கிருந்து பணம் வரும் என்று விவரத்தை தெரிவிக்க முடியுமா?

இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுரஜ்வாலா கூறும்போது, புதிய சுகாதார திட்டத்தின்படி 5 கோடி குடும்பங்கள இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தினாலே 12 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதாவது மொத்த பட்ஜெட்டில் 60 சதவீதம் பணம் தேவை. இதற்கு எங்கிருந்து பணம் வரும் என்று கூறினார். #

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − two =

*