;
Athirady Tamil News

கோத்தாவின் விடுதலை மனு நிராகரிப்பு…!!

0

எவன்காட் வழக்கிலிருந்து தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்று குறித்த மனுவை இன்று நிராகரித்துள்ளது.

இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்கு தொடரப்பட்டது.

எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை பராமரித்துச் செல்வதற்காக அனுமதியளித்த காரணத்தினால் அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கோத்தா உள்ளிட்ட 6 பிரிதிவாதிகளும் அடிப்படை எதிர்ப்பு மனுவொன்றை தாக்கல் செய்து இதில் பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறும் கோரியிருந்தனர். எனினும் குறித்த மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 1 =

*