;
Athirady Tamil News

வவுனியா கனகராயன்குளத்தில் விபத்து தந்தையும் மகளும் படுகாயம்..!! (படங்கள்) இணைப்பு

0

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அரசியல்வாதியொருவருக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் வாகனமொன்றே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையையும் மகளையுமு; மோதியுள்ளது.

இதன் காரணமாக 7 வயதுடைய மகளும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தினை பொலிஸார் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*