;
Athirady Tamil News

சரண குணவர்தனவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இரத்து..!!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இரத்துசெய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரண குணவர்தன இன்று (02) வழக்கறிஞர் ஊடாக நீதிமன்றத்திற்கு முன் ஆஜரான போது கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி இவ்வுத்தரவை பிறப்பித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கவும் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய காலத்தில் வாடகைக்கு வாகனங்களை பெற்றுக்கொண்ட போது ஏற்பட்ட நிதி மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − five =

*