;
Athirady Tamil News

ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ள மாவை சேனாதிராஜா..!!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சட்டக்கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த சட்டக் கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு இன்றைய தினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறப்பினர் மாவை சேனாதிராஜா சார்பில் இந்த சட்டக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மோகன் பாலேந்திரா எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்திவருவதாக அந்த சட்டக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், குறித்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்ட நிலையிலும், அவர் தொடர்ச்சியாக அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தரப்புவாதிக்கு நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே, சிவசக்தி ஆனந்தனிடம் 100 கோடி ரூபா நட்டஈடுகோரி சட்டக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மோகன் பாலேந்திரா தெரிவித்தார்.

இந்த சட்டக் கடிதத்தக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*