;
Athirady Tamil News

பிரான்ஸ்: ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதல்- 5 பேர் பலி..!!

0

பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள செயிண்ட்-டுரோபேஸ் நகரின் வடமேற்கில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கேர்கெஸ் ஏரிக்கரை பகுதி வழியாக இன்று பறந்த ராணுவத்தை சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தினால் இரு ஹெலிகாப்டர்களும் நொறுங்கி விழுந்தன. அவற்றில் சென்ற ஐந்து பேரும் உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஹெலிகாப்டர்களின் சிதிலங்களுக்கிடையில் சிக்கியுள்ள பிரேதங்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அருகாமையில் உள்ள பிரிக்நோலஸ் நகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*