;
Athirady Tamil News

நேபாளம் மீது சீனாவின் கண்: சுஷ்மா சுற்றுப்பயணம் மூலம் மோடியின் நகர்வு சாத்தியமாகுமா?..!!

0

இந்தியாவின் அண்டை நாடான நேபாளில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ( ஒருங்கினைந்த மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. புதிய அரசை விரைவில் அமைக்க உள்ள இந்த கூட்டணியின் சார்பில் ஷர்மா ஒலி புதிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.

சீனாவின் ஆதரவாளராக கருதப்படும் ஒலி, முன்னர் பிரதமராக இருந்த போது இந்தியாவுடனான பல்வேறு வெளியுறவு கொள்கைகளில் முரண்பாடுகளை கொண்டிருந்தார். இதனால், அவர் இந்திய எதிர்ப்பாளராகவே கருதப்பட்டார். இந்நிலையில், அவர் பிரதமராக பதவியேற்க உள்ளது இந்தியாவை சற்று கவனிக்க வைத்துள்ளது.

சமீபத்தில் நேபாளத்திற்கான இணையதளம் இணைப்பு வழங்குவதை இந்தியாவிடமிருந்து சீனா தட்டிப்பறித்தது. இதனால், சற்று விழிப்படைந்துள்ள இந்தியா நேபாளத்துடன் இணக்கமாக செல்ல முடிவெடுத்தது. அதன் முதற்படியாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக காத்மண்டு சென்றுள்ளார்.

நேபாள பிரதமர் ஷெர் பகதுர்

நேபாள பிரதமர் ஷெர் பகதுர், ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி ஆகியோரை சந்தித்து தேர்தலை அமைதியான முறையில் நடத்தியதற்கு பாராட்டுக்களை சுஷ்மா தெரிவித்தார். ஆனால், அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள ஷர்மா ஒலி உடனான சுஷ்மாவின் சந்திப்பே முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நேபாள பிரதமர் ஷெர் பகதுர் உடன் சுஷ்மா

பழைய பகைகளை மறந்து இந்தியா – நேபாள் இடையே உள்ள உறவை இணைந்து வலுவாக்குவோம் என பிரதமர் மோடியின் கூற்றை சுஷ்மா ஒலியிடம் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்திய எதிர்ப்பு என்பது நேபாளில் எழக்கூடாது என்பதற்காக தனது பயணத்தில் சுஷ்மா சுவராஜ் முக்கிய கட்சியின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

சுஷ்மாவின் இந்த அதிரடி சுற்றுப்பயணத்தை சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. தனது கைக்குள்ளேயே நேபாளம் அடங்கி இருக்க வேண்டும் என சீனா நினைப்பதாக வெளியுறவு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், சீனாவோ, இந்தியாவோ யாரையுமே சற்று தள்ளி வைத்தே பேச வேண்டும் என நேபாளம் நினைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + eighteen =

*