சினிமா தியேட்டரில் இளம்பெண்ணை கற்பழித்த பேஸ்புக் நண்பர்..!!

ஐதராபாத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ‘பேஸ்புக்’ சமூகவலைதளம் மூலம் கந்தகட்லா பிக்ஷாபதி (23) என்பவருடன் பழக்கம் வைத்து இருந்தார்.
இவர்கள் இருவரும் சமீபத்தில் ‘பத்மாவத்’ சினிமா படம் பார்க்க முடிவு செய்தனர். நேற்று ஐதராபாத்தில் உள்ள பிரசாத் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர்.
தியேட்டரில் கூட்டம் குறைவாக இருந்ததால் இருவரும் ஆட்கள் இல்லாத தனிமையான பகுதி இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கந்தகட்லா பிக்ஷாபதி தான் அழைத்து வந்த இளம்பெண்ணை தியேட்டரிலேயே கற்பழித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.
கந்தகட்லா பிக்ஷாபதி கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து கவனக்குறைவாக செயல்பட்டதாக தியேட்டர் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.