;
Athirady Tamil News

நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு தற்கொலை..!!

0

நெல்லை சந்திப்பில் ஒரு தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நர்சிங் படிக்கும் மாணவிகள் ஏராளமானோர் தங்கியிருந்து அதே மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியும் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு மருத்துவமனையில் தனியாக அறைகள் உள்ளன.

அந்த அறையில் திண்டுக்கல்லை சேர்ந்த உஷாமேரி (வயது18) என்பவரும் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று மதியம் உஷாமேரி தனது அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உஷாமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உஷாமேரி எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*