;
Athirady Tamil News

பூநகரியில் முதிரைமரக்குற்றிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது…!!

0

கிளிநொச்சி பூநகரி பொலிஸார் பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரைமரக்குற்றிகள் மீட்க்கப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இம்முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தல்களை கட்டுப்படுத்த, பூநகரிப்பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதீக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூநகரி பொலிஸார், குறித்த சான்றுப்பொருட்களையும் சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆயர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + fourteen =

*