;
Athirady Tamil News

சிறுத்தைகளிடமிருந்த எம்மை காப்பாற்றுங்கள்- தங்ககலை மக்கள் கோரிக்கை..!! (படங்கள்)

0

சிறுத்தைகளிடமிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி, மெராயா தங்ககலை தோட்ட மேற்பிரிவு மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தங்ககலை மேற்பிரிவு தோட்டத்தின் கொழுந்து மடுவத்திற்கருகில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதில் சுமார் 50இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டு தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, “தமது பிள்ளைகள் சுமார் ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான வீதியை கடந்து பாடசாலைக்கு செல்கின்றனர். இவ்வீதி தேயிலைக் காடுகளின் ஊடாக வருவதால் அந்த தேயிலைத் காடுகளில் மறைந்திருக்கும் சிறுத்தைகள் எம்மை தாக்ககூடும்.

அதற்கு காரணம் இந்த தோட்டத்தை தோட்ட நிர்வாகம் உரிய பராமரிப்பினை மேற்கொள்ளாததால் தேயிலைக்கு மேலாக பலவித புற்கள் வளர்ந்து பற்றைகாடுகலாகி விட்டது.

எனவே தேயிலை மலைகளை துப்பரவு செய்து கொடுத்தால் மாத்திரமே எமது உயிரை காப்பாற்றி கொள்ள முடியும். இல்லையேல் எந்த நேரத்தில் எமது உயிர்களை சிறுத்தைகள் பறித்துக்கொள்ளும்” என தெரிவித்தனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*