;
Athirady Tamil News

கொட்டியாகல தோட்டத்தில் மணல் ஏற்றி வந்த பாரரஊர்தி விபத்து..!! (படங்கள்)

0

மஹியங்கனை பகுதியில் இருந்து பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்க்காக மணல் ஏற்றி வந்த பாரஊர்தி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று விடியற் காலை 05.30மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும்ட தெரிவித்தனர்

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்த பொலிஸார் பாரஊர்தியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே இந்த விபத்துக்கான காரணமென பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சம்பவம தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*