;
Athirady Tamil News

வவுனியாவில் நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் காவலாளி கைது..!!

0

வவுனியா வேப்பங்குளம் நெற்களஞ்சியசாலையில்; நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் அக்களஞ்சியசாலையின் காவலாளி ஒருவர் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

நெற் களஞ்சியசாலையின் காவலாளியான கருப்பையா சண்முகநாதன் (52) என்பவரே சந்கேகத்தின் பேரில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேப்பங்குளம் நெற் களஞ்சியசாலையில் நெல் மூடைகள் குறைவடைந்திருப்பதை அவதானித்த பொறுப்பதிகாரி மாவட்ட செயலகத்தினூடக பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் வவுனியா கற்பகபுரத்தில் அமைந்துள்ள காவலாளியின் வீட்டிலிருந்து 39 மூடைகள் கொண்ட இரண்டாயிரம் கிலோ நெல்லை கைப்பற்றியுள்ளதுடன் இக் கொள்ளையில் வேறு நபர்களுக்;கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் வேப்பங்குளம் நெற்களஞ்சியசாலையானது விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*