;
Athirady Tamil News

டெல்லியில் உள்ள தமிழக அரசின் 2 விருந்தினர் இல்லங்கள் பெயர் மாற்றம் – அரசாணை வெளியீடு..!!

0

இது குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் கவுடில்யா மார்க் பகுதியில் பழைய தமிழ்நாடு இல்லம் என்ற பெயரிலும், பீர் திக்ரஞ்சித் மார்க் பகுதியில் கூடுதல் தமிழ்நாடு இல்லம் என்ற பெயரிலும் தமிழக அரசின் விருந்தினர் இல்லங்கள் செயல்படுகின்றன. டெல்லிக்கு செல்லும் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த இல்லங்களில் தங்குகின்றனர்.

பழைய தமிழ்நாடு இல்லத்தில் தங்க இடம் ஒதுக்கும் போது பழைய இல்லம் என்ற உணர்வு அங்கு தங்குவோர் மனதில் ஏற்படுகிறது. எனவே இரு விருந்தினர் இல்லங்களின் பெயர்களையும் முறையான பெயர்களை கொண்டு அழைத்தால் இந்த உணர்வை தவிர்க்கலாம் என டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

அவருடைய கருத்துருவை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்தது. இதையடுத்து கவுடில்யா மார்க் பகுதியில் செயல்படும் விருந்தினர் இல்லத்துக்கு வைகை தமிழ் இல்லம் என்றும், பீர் திக்ரஞ்சித் மார்க் பகுதியில் செயல்படும் விருந்தினர் இல்லத்துக்கு பொதிகை தமிழ் இல்லம் எனவும் பெயர் மாற்றம் செய்து கவர்னரின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*