;
Athirady Tamil News

இரகசிய கலந்துரையாடல் சிக்கியது…!!

0

விலங்குகள் கொலை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மோசடியாளர்கள் சம்பந்தமாக உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் காட்டு யானைகள் கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கலந்துரையாடல்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மத்தியநிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த தகவலை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாக அந்த மத்தியநிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை சோமாவதி வனப்பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானையொன்று சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + nineteen =

*