;
Athirady Tamil News

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…!!

0

சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களுடன் களுத்துறை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்றைய தினம் 75 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் இருந்து அம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + seventeen =

*