;
Athirady Tamil News

கேரளாவில் பட்ஜெட் உரையில் இடம் பெற்ற பிளஸ்-2 மாணவியின் கவிதை..!!

0

கேரளாவில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதி மந்திரி தாமஸ் ஐசக், பட்ஜெட் உரையை படித்தார். இதில் பெண்கள் பாதுகாப்புக்கும், அவர்களின் மேம்பாட்டிற்கும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.

ரூ.50 கோடி செலவில் பெண்கள் மேம்பாட்டு பணிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்குவதற்கு மாவட்டந்தோறும் விடுதிகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பெண்களுக்கான ஒவ்வொரு திட்டங்களை படிக்கும்போதும், நிதி மந்திரி தாமஸ் ஐசக், அதற்கு ஏற்றார் போன்ற கவிதைகளையும் படித்தார்.

இதற்காக பிரபல மலையாள பெண் கவிஞர்கள் லலிதாம்பிகா அந்தார்ஜனம், வல்சலா, விஜயலெட்சுமி, கே.ஆர். மீரா ஆகியோரின் கவிதை தொகுப்புகளில் இருந்து மேற்கொள் காட்டினார்.

இதுபோல பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பட்டியலிட்டபோது, கேரளாவின் புலப்பட்டாவைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி சிநேகா சமையல் அறையில் பெண்கள் பற்றி எழுதிய 12 வரி கவிதையையும் வாசித்தார்.

இந்த கவிதை வரிகள் பட்ஜெட்டில் வெளியானதும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி மந்திரி தாமஸ் ஐசக் கூறியதாவது:-

பட்ஜெட் உரையை தயாரித்தபோது, பெண் கவிஞர்களின் கவிதை வரிகளை பட்ஜெட்டில் சேர்க்க விரும்பினேன். இதற்காக இன்டர்நெட்டில் தேடியபோது, சமையல் அறை பற்றி பிளஸ்-2 மாணவி சிநேகா எழுதிய கவிதை மனதை தொட்டது.

சமையல் அறையில் வெளி உலகுக்கு தெரியாமல் பெண்கள் செய்யும் பணிகள் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வரிகள் பட்ஜெட்டிற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனை உரையில் சேர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:-

கேரளாவில் ஒக்கி புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மீனவர்களுக்கு வானிலை குறித்து எச்சரிக்கை செய்ய சேட்டிலைட் போன் வசதி ஏற்படுத்த ரூ.100 கோடி, கடலோர சாலைகளை சீரமைக்க ரூ.600 கோடி, அரசு ஆஸ்பத்திரிகளில் புற்று நோய் சிகிச்சை தொடங்கும் திட்டம்.

பொது கல்விக்கு ரூ.970 கோடி, பீர்பானங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளுக்கும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 1 =

*