;
Athirady Tamil News

ஆவடியில் பட்டப்பகலில் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை..!!

0

சென்னையை அடுத்த ஆவடி பூம்பொழில் நகர், சம்பங்கி தெருவை சேர்ந்தவர் ஜோசப் தேவபிரகாரன் (45). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஜினிபாய் (40).

ஆவடி கனரக தொழிற் சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்தனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகளை அள்ளி சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த ரஜினிபாய் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அறையில் சென்று பார்த்த பிறகுதான் நகை கொள்ளை போனது தெரிந்தது.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் ரஜினிபாய் புகார் அளித்தார். உதவி கமி‌ஷனர் நந்தகுமார் மேற்பார்வையில் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளையில் கும்பலாக ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ரஜினிபாய் மட்டும் தனியாக இருப்பதால் அவர் வேலைக்கு செல்வதை தினமும் நோட்டமிட்டு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 3 =

*