;
Athirady Tamil News

ஜேர்மனியில் தண்ணீரை பீர் மதுவகையாக மாற்றிய நபர்கள்..!!

0

ஜேர்மனியில் பாட்டில்கள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் நிலையில் அதில் தரப்படும் வைப்பு தொகையை வைத்து இரண்டு இளைஞர்கள் தண்ணீரை பீர் மதுவகையாக மாற்றியுள்ளனர்.

ஜேர்மனியில் ஆண்டுக்கு ஒருநபர் மட்டும் 37 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் சம்மந்தமான பொருட்களை பயன்படுத்துகிறார்.

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகளில் பாதி எரிக்கப்படுவது மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.மீதி பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி முறையில் மீண்டும் உபயோகத்துக்கு தயார் செய்யப்படும்.

கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து மறுசுழற்றி செய்யப்படும் பிளாஸ்டிக் மற்றும் இதர ரக பாட்டில்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கப்பட்டது.

தாங்கள் பயன்படுத்திய பாட்டில்களை கடைகளில் கொடுத்தால் அதன் மதிப்பில் 8-லிருந்து 25 சதவீதம் வரையிலான பணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி தரப்படும்.

இதை பயன்படுத்தி பெர்லினில் உள்ள இரண்டு இளைஞர்கள் தண்ணீரை பீர் மதுவாக மாற்றியுள்ளனர்.அதாவது, உணவு கூப்பனை பயன்படுத்தி இருவரும் கடையில் ஒரு டஜன் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர்.

பின்னர் அதிலிருக்கும் தண்ணீரை புல்தரையில் ஊற்றிவிட்டு அந்த பாட்டில்களை மறுசுழற்சி முறையில் விற்றுள்ளனர்.

அந்த பணத்தில் ஐந்து கேன்கள் பீர் மதுவை வாங்கி மகிழ்ச்சியாக அருந்தியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eight =

*