;
Athirady Tamil News

சுவிஸ் கடவுச்சீட்டு இல்லாத இளம்பெண்ணிற்கு நேர்ந்த சிக்கல்..!!

0

சுவிஸ் கடவுச்சீட்டு இல்லாத இளம்பெண்ணிற்கு அவர் பணிபுரியும் நிறுவனம் பதவி உயர்வு வழங்க மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Galler Rheintal பகுதியில் பிறந்து அதே பகுதியில் குடியிருந்தும் வருகிறார், ஆஸ்திரிய நாட்டு இளம்பெண் ஒருவர்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் Rheineck பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனிடையே இவரது அலுவலகத்தில் பதவி உயர்வு தொடர்பாக இவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் சுவிஸ் கடவுச்சீட்டு இல்லை என்ற ஒரே காரணத்தல் அந்த இளம்பெண்ணிற்கு தொடர்புடைய நிறுவனமானது பதவி உயர்வு வழங்க மறுத்துள்ளது.

சர்வதேச நிறுவனம் ஒன்றில் பணி புரியும் அவருக்கு சுவிஸ் கடவுச்சீட்டு இல்லை என்ற ஒரே காரணத்தால் பதவி உயர்வு வழங்க மறுத்துள்ளனர்.

St. Gallen மாகானத்தை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட கால அளவுக்குள் புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிப்பது என்பது சாத்தியமற்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் தற்போது குடியிருக்கும் Rheineck பகுதியில் புதிய கடவுச்சீட்டு தொடர்பாக மனு அளித்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

குறித்த பகுதியில் அவர் குடிபெயர்ந்து மிக அதிக நாள் ஆகவில்லை எனவும், ஆதலால் கடவுச்சீட்டு வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் சட்ட திட்டங்களின்படி, நபர் ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரே பகுதியில் வசித்து வந்தால் மட்டுமே அவர் கடவுச்சீட்டு பெற தகுதியானவர் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் சூரிச் மாகாணத்தை பொறுத்தமட்டில் ஒருவர் தொடர்ந்து 2 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம், ஆனால் சூரிச் பகுதிக்கு தாம் குடிபெயர விரும்பவில்லை எனவும் குறித்த இளம்பெண் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 2 =

*