;
Athirady Tamil News

பிரித்தானியாவில் தந்தையுடன் செல்ல மகளுக்கு அனுமதி மறுப்பு: வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதி..!!

0

பிரித்தானியாவில் தந்தையுடன் செல்ல சிறுமிக்கு அனுமதி மறுத்து நீதிபதி வரலாற்று தீர்ப்பு அளித்துள்ளார்.

FGM என்று அழைக்கப்படும் ஃபீமேல் ஜெனிட்டல் மியூட்டிலேஷன் என்பது குழந்தையின் பெண்ணுறுப்பின் முக்கிய பாகங்களை வெட்டி எடுத்து விடுவதாகும்.

இதனால் குழந்தைக்கு சொல்ல முடியாத அளவு வலி ஏற்படுவதோடு திருமணத்திற்குப் பின் பல பிரச்சினைகளையும் அவள் சந்திக்க நேரிடும்.

பல பெண் குழந்தைகள் வளர்ந்து ஆளாகும்போது மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள இந்தப்பழக்கம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா போன்ற நாடுகளில் இன்றும் பின்பற்றப்படுகிறது.

கினியாவைச் சேர்ந்த கருப்பு ஆப்பிரிக்க இஸ்லாம் பின்னணியைக் கொண்ட ஒருவர், பிரித்தானிய கிறிஸ்தவப் பெண் ஒருவரை சமூக வலைத்தளம் மூலம் சந்தித்து 2007ஆம் ஆண்டு மணந்து கொண்டார்.

தற்போது பிரிந்து வாழும் அந்த தம்பதியின் மகள் தாயுடன் வசிக்கிறார், இஸ்லாமியப் பின்னணியைக் கொண்ட அந்த மனிதர் தனது மகளை கினியாவுக்குக் கொண்டு சென்று Female Genital Mutilation (FGM) செய்து விடலாம் என அஞ்சும் அவளது தாயார் நீதிமன்றத்தை அணுக, நீதிபதி Ms Justice Russell, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Female Genital Mutilation (FGM) செய்வது பிரித்தானியாவில் சட்டப்படிக் குற்றமாகும், அது child abuse குற்றமாக கருதப்படுகிறது.

இந்தத் தீர்ப்பு ஒரு ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறும் அந்தக் குழந்தையின் தாயின் வழக்கறிஞர் Zimran Samuel, இந்தத் தீர்ப்பு தவறு செய்தவர்களைத் தண்டிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட உள்ளவர்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்படும் பெண்களுக்கும் அவர்களை அச்சுறுத்துபவர்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவரை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*