;
Athirady Tamil News

எம்மை சிதைக்க எண்ணும் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் -வன்னி எம்.பி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா…!!

0

????????????????????????????????????
போராட்ட காலத்தில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த எம்மை சிதைக்க எண்ணும் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி தெரிவிப்பு

போராட்ட காலத்தில் கௌரவமாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்த எம்மை சிதைக்க எண்ணும் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என வன்னி எம்.பி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நெடுங்கேணியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்

எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் இருந்து சைக்கிளில் ஏறி சறிக்கி விழுந்து உதய சூரியனில் குந்திக்கொண்டு இருக்கிறார். இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டு கோடி ரூபாவை பெற்று அபிவிருத்தியை செய்யத் தெரியாதவர். ஏனைய 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் இலஞ்சம் வாங்கி விட்டார் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார். இந்த பாராளுமன்ற உறுப்பினர் கடந்த 17வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் வருடாந்தம் பெற்ற 01 கோடி ரூபா வீதம் 17 கோடி ரூபாவும் இலஞ்சமா?. அவர் இந்த இரண்டு கோடி ரூபாயை இலஞ்சம் என கூறுவது அவரால் அபிவிருத்திக்கான திட்டத்தை கொடுக்க முடியாமல் இருந்ததாலா? என்று கேட்கின்றேன்.

மாற்றுக்கட்சிகள் வடக்கில் ஒரு முகத்தையும் தெற்கில் இன்னொரு முகத்தையும் காட்டுகின்றனர். இங்கு யானையில் ஏறி வருபவர்கள். அங்கு மயிலில் ஏறி ஆடுகின்றனர். அங்கு வெற்றிலை கொடுப்பவர்கள் இங்கு கை காட்டுகிறார்கள். இதனாலதான் எங்கள் மூதாதையர்கள் அப்போதே கூறிவிட்டார்கள் தொப்பிபிரட்டிகள் என்று.

இவர்கள் எங்களது இனத்திற்கு என்ன சொல்கிறார்கள். இவர்களது இலட்சியம் என்ன. எங்களது கரையோரங்களிள் சிங்கள குடியேற்றங்களை செய்கின்றார்கள். மகாவலி அபிவிருத்தி என கூறி எல் வலயம் பி வலயம் சி வலயம் என திட்டங்களை தீட்டி எங்கள் மக்களின் பூர்வீக உறுதி காணிகளை அடாவடிதனமாக பிடித்து சிங்கள மக்களிற்கு வழங்குகிறார்கள்.

இவர்களுக்காகவா யானைக்கட்சிக்கும் நீலக்கட்சிக்கும் வாக்களிக்க போகின்றீர்கள் இவ்வாறு எங்களது இனத்தை சிதைக்கின்றஇ எமது பழமையை அழிக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
யுத்தத்தில் எம்மை சிதைத்தவர்கள் தமிழரை நாளுக்கு நாள் சிதைத்துக்கொண்டு இருக்கின்றனர். கஞ்சாவை கடத்தி வருவது வடி சாராயம் காச்சுவனுக்கு துணை போவது சாராய விற்பனை நிலையங்களை அளவு கணக்கில்லாமல் திறந்து வைப்பது என்ற திட்டங்களை மேற்கொள்கின்றனர். இதனால் எமது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சிதைந்து போகின்றது.

ஆயுத போராட்ட காலத்தில் கௌரவமாகவும் கண்னியமாகவும் வாழ்ந்தவர்கள் நாம். பெண்களிற்கு பாதுகாப்பு இருந்தது. இதனை நாம் வளர விடப்போகின்றமா என்பதை சிந்தியுங்கள். இங்கே மாற்றுக்கட்சிகளின் ஊடுருவிகளும் புல்லுரிவிகளும் மக்களிற்கு பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

எங்களது வாக்குகளை பெற்ற வன்னி அமைச்சரின் திட்டங்கள் அனைத்தும் முஸ்லீம் குடியேற்றத்தை மேற்கொள்ளுவது மரத்தை கடத்துவது மண்க்கணi கடத்துவது என்பதாகவே உள்ளது. வடக்கு கிழக்கு இணைய கூடாது என்பதை இந்த இடைக்கால அறிக்கையின் பின்னிணைப்பாக இணைந்துள்ளவர்தான் இந்த அமைச்சர்.

விசேட நிதியேற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழ்கின்ற முஸ்லீம்களிற்கு நிதியொதுக்கீடு இடம்பெற்றுள்ளது. ஆனால் நெடுங்கேணி போன்ற எல்லையோர கிராமங்களில் 1984ம் ஆண்டு இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள் இன்றும் அடிப்படை வசதியின்றி இருக்கின்றன. இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளால் அமைச்சராகியவருக்கு இந்த மக்கள் கண்ணுக்கு தெரியவில்லையா.

தன் இனத்தை வளர்த்தெடுப்பதற்காக தேர்தல் காலங்களில் வந்து பொய் பிரச்சாரங்களை செய்து தங்களுடைய அபிவிருத்திக்காவும் தமிழ் இனத்தின் வீழ்ச்சிக்காவும் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 1000 விகாரைகளை அமைப்பது திட்டமாகவுள்ளது. ஆகவே இவ்வாறானவர்களிற்கா வாக்களிக்க போகின்றீர்கள் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 10 =

*