;
Athirady Tamil News

விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கு இலவச போக்குவரத்து வசதி..!!

0

விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்காக வாகனப் போக்குவரத்து வசதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதற்காக நாளைய தினத்திற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் கூறியுள்ளது.

விஷேட தேவையுடையவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிப்பதற்காக இலவசமாக ​தேர்தல்கள் திணைக்களத்தினால் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

இதேவேளை நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 07ம் திகதி விஷேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + eleven =

*