;
Athirady Tamil News

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா 600 மில்லியன் டொலர்கள் கடன் உதவி..!!

0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக எதிர்வரும் இரண்டு வருடங்களில் சீனா 600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல் எதுவும் வராமல் 2 வருட காலங்கள், அதனை நடத்தி சென்றனர். அந்த துறைமுகத்திற்கு ஆரம்ப வரியை செலுத்துவதற்கு, கொழும்பு துறைமுகத்தின் இலாபத்தை பெற்று கொண்டனர்.

இவ்வாறு தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேற்கொண்டிருந்தால் கொழும்பு துறைமுகத்தை இழுத்து முடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 3 =

*