;
Athirady Tamil News

ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது வருகைக்கு மக்கள் எதிர்ப்பு…!! (படங்கள்)

0

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கை காரணமாக அம்பாறை சாய்ந்தமருதுக்கு வருகைதரும் ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(சனிக்கிழமை) அப்பிரதேசம் முழுவதும் கடைகள் மூடப்பட்டும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டுமுள்ளன.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக் கொடுப்பதில் ரவூப் ஹக்கீம், பாரிய துரோகத்தினைச் செய்துள்ளதாக, அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளதோடு, தமக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் தமது பிரதேசத்தில் அரசியல் நடவடிக்கைகளில் எந்த கட்சியும் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சில நிகழ்வுகளில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த போது, அப் பிரதேச மக்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக, தனது வருகைகளை ஹக்கீம் இரத்துச் செய்திருக்கின்றார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, சாய்ந்தமருதில் மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் இன்றைய தினம் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*