;
Athirady Tamil News

சல்லித்தீவு நாவல் வெளியீட்டு விழா..!! (படங்கள்)

0

மட்டக்களப்பு மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் மகுடம் வி.மைக்கல்கொலின் ஏற்பாட்டில் கவிஞர் செ.குணரெத்தினத்தின் சல்லித்தீவு நாவல் வெளியீட்டு விழா மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ.நவரெத்தினம் (நவாஜி) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்து கொண்டார்.

சிறப்பதிதிகளாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன், முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசாரப்பணிப்பாளர் செ.எதிர்மன்னசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். நூல் விமர்சன உரையினை கவிஞர் மேரா நிகழ்த்தினார். நூலின் முதற் பிரதியை சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி, தொழிலதிபர் ச.சிவபாதசுந்தரம் ஆகியோர் பெற்றக்கொண்டனர்.

ஏற்புரையினை நூலாசிரியர் கவிஞர் செ.குணரெத்தினம் வழங்கினார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − four =

*