;
Athirady Tamil News

ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. கமி‌ஷனர் கைது..!!

0

கான்பூரில் ஜி.எஸ்.டி. கமி‌ஷனராக இருப்பவர் சன்சர் சந்த். ஐ.ஆர்.எஸ். அதிகாரியான இவர் தொழிலதிபர்களிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒரு வாரத்திற்கு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக தரவேண்டும் என்று அவர் வசூலித்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்துள்ளன. இதேபோல் வேறு சில அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதாக தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று இரவு கான்பூர் மற்றும் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் இன்று அதிகாலை, ஜி.எஸ்.டி. கமிஷனர் சன்சர் சந்த், 2 சூப்பிரெண்டுகள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். சன்சர் சந்தின் மனைவி மீதும் எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சன்சர் சந்த் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1½ லட்சம் லஞ்சம் கொடுத்தபோது பிடிபட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. லஞ்சம் கொடுத்த நபரை காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*