;
Athirady Tamil News

சாலை விபத்தில் 2 மாணவர்கள் பலி: ஐந்து பேருந்துகள் தீவைத்து எரிப்பு..!!

0

மேற்கு வங்காளம் மாநிலம் பெலியகட்டா பகுதியில் உள்ள சிங்ரிகட்டாவின் பைபாஸ் சாலை வழியே அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையை கடக்க முயன்றவர்கள் மீது பேருந்து மோதியது.

இந்த விபத்தில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இறந்தது சுகந்த நகர் பகுதியை சேர்ந்த பிஸ்வஜித் புனியா மற்றும் சஞ்சய் பனிக் என தெரியவந்தது.

மாணவர்கள் இறந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் திரண்டு வந்து விபத்து ஏற்படுத்திய பேருந்து உள்பட ஐந்து பேருந்துகளுக்கு தீ வைத்தனர். அத்துடன், அந்த வழியாக வந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் எரிந்து கொண்டிருந்த பேருந்துகளை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகுமாறு கூறிய போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மீதும் அவர்கள் கல்வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 3 =

*