;
Athirady Tamil News

நியூசிலாந்தை தாக்கிய சூறாவளி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!!

0

நியூசிலாந்தில் பலத்த சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் ‘பெஹி’ புயல் காரணமாக நாட்டின் தென்பகுதியில் உள்ள நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் தொடர் மழையின் தாக்கத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.பலத்த சூறாவளிக் காற்றினால் பல பகுதிகளில் கட்டிடங்கள், மின் கம்பங்கள் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும், ஆங்காங்கே மரங்களும் விழுந்துள்ளன.தொடர் மழையால் உண்டான வெள்ளப்பெருக்கு ஓடுவதால், அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × three =

*