;
Athirady Tamil News

சொத்து தகராறு: அண்ணன், அண்ணியை சுட்டுக் கொன்றவர் தற்கொலை..!!

0

கர்நாடகம் மாநிலம் மடிகேரி தாலுகாவில் உள்ள கிகாலு பகுதியை சேர்ந்தவர் உத்தப்பா (35). இவரது அண்ணன் தேவையா (54), அண்ணி பிரேமா (48). அண்ணன் தம்பிக்குள் கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை உத்தப்பா, தேவையா வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற அவர் துப்பாக்கியால் தேவையாவை சரமாரியாக சுட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஓடிவந்த பிரேமாவையும் சரமாரியாக சுட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அதன்பின்னர், தன்னை தானே துபாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக அண்ணன், அண்ணியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட தம்பியின் செயல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + two =

*