;
Athirady Tamil News

ஒரு ரூபாய்க்காக முதியவரை அடித்துக் கொன்ற கடைக்காரர்…!!

0

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் காம்னே(வயது 54). இவர் நேற்று இரவு ராம்பாக் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு முட்டை வாங்கச் சென்றுள்ளார். ஆனால் அவர் முட்டையின் விலையை விட ஒரு ரூபாய் குறைத்து கொடுத்துள்ளார்.

ஒரு ரூபாய் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கடைக்காரர் சுதாகர் பிரபு கண்டிப்புடன் கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மனோகரை கடைக்காரர் தவறான வார்த்தைகளால் திட்ட, கைகலப்பு ஏற்பட்டது.

மனோகரை கடைக்காரர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்காரர் சுதாகரை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*