;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் பயங்கரம் குண்டு வெடிப்பில் சிக்கி பெண்கள் உள்பட 3 பேர் பலி…!!

0

ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணம், கிலான் மாவட்டத்தில் ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் அங்கு சிர்லாய் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த குண்டு வெடிப்பில் சிக்கி கார் தூக்கி வீசப்பட்டது.

அதில் பயணம் செய்த 2 பெண்கள், ஒரு குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பால் அந்த பகுதியே அதிர்ந்தது.

சாலையோரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டின் மீது கார் ஏறியபோது, குண்டு வெடித்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஆணும், பெண்ணும் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாலையோரத்தில் தலீபான் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுதான் வெடித்திருக்கும் என நம்பப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + seventeen =

*